உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நஞ்சப்பா சரிவு; ஜெய்வாபாய் உயர்வு

 நஞ்சப்பா சரிவு; ஜெய்வாபாய் உயர்வு

திருப்பூர், ;திருப்பூரில் அதிக மாணவ, மாணவியர் படிக் கும் நஞ்சப்பா, கே.எஸ்.சி., பழனியம்மாள், ஜெய்வாபாய் பள்ளிகளின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம், எப்போதுமே பெற்றோரால் மட்டுமின்றி, பொதுமக்களாலும் உற்று நோக்கப்படும்.

2.13 சதவீதம் உயர்ந்த கே.எஸ்.சி.,

கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு, 385 பேர் தேர்வெழுதினர்; 317 பேர் தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி சதவீதம், 82.34. நடப்பாண்டு, 412 பேர் தேர்வெழுதினர். 64 பேர் தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சி சதவீதம், 84.47.

1.98 சதவீதம் குறைந்த நஞ்சப்பா

நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2024ல், 215 பேர் தேர்வெழுதி, 168 பேர் தேர்ச்சி பெற்றனர். 47 பேர் தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சிசதவீதம், 78.14. நடப்பாண்டு, 235 பேர் தேர்வெழுதினர்; 180 தேர்ச்சி பெற்றனர். 55 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 76.60.

4.04 சதவீதம் உயர்ந்த ஜெய்வாபாய்

கடந்த, 2024ல், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 733 மாணவியர் தேர்வெழுதினர்; 625 பேர் தேர்ச்சி பெற்றனர். 108 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 85.27.நடப்பாண்டு, 683 மாணவியர் தேர்வெழுதி, 73 பேர் தேர்ச்சி பெறவில்லை. 610 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 89.31. முந்தைய ஆண்டை விட, 4.04 சதவீதகூடுதல் தேர்ச்சியை பள்ளி பெற்றுள்ளது.

2.13 சதவீதம் அதிகரித்த பழனியம்மாள்

பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந் தாண்டு, 477 பேர் தேர்வெழுதி, 446 பேர் தேர்ச்சி பெற்றனர்; 31 பேர் தேர்வாகவில்லை. நடப்பாண்டு, 389 மாணவியர் தேர்வெழுதி, 372 பேர் தேர்ச்சி பெற்றனர்; 17 பேர் தேர்வாகவில்லை. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம், 93.50. நடப்பாண்டு, 95.63.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ