உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடராஜா தியேட்டர் ரோடு பாலம் திறப்பு 

நடராஜா தியேட்டர் ரோடு பாலம் திறப்பு 

திருப்பூர்: திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு புதிய பாலம் கட்டப்பட்ட நிலையில், நேற்று காலை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி கமிஷனர் அமித், மேயர் தினேஷ்குமார் பங்கேற்றனர். அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு பாலம் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், 14 கோடி ரூபாய் மதிப்பில், நொய்யலாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இது 97.30 மீ, நீளம் மற்றும் 12.90 மீ., அகலம் கொண்டது. நொய்யலாற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் அருகே, 18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் பாலம் விரைவாக முடிக்கப்பட்டு திறக்கப்படும். பார்க் ரோட்டில், 22 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் சுரங்கப்பாலம், அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலம் ஆகியன விரைந்து திறக்கப்படும். நல்லாற்றின் குறுக்கிலும் பாலம் கட்டி முடித்து விரைவாக திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை