உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிப்ட்-டீ கல்லுாரியில் தேசிய பேஷன் தின விழா

நிப்ட்-டீ கல்லுாரியில் தேசிய பேஷன் தின விழா

திருப்பூர்; முதலிபாளையம்'நிப்ட்--டீ' கல்லூரியில், தேசிய பேஷன் தினம் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.தனித்துவம் வாய்ந்த படைப்புகளை வெளிப்படுத்துவதன் மூலமாக, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பேஷன் தினம் கொண்டாடப்படுகிறது.பேஷன் டிசைனிங் முதலாம் ஆண்டு மாணவர்கள், சொந்தமாக டிசைன் செய்து வடிவமைத்த, 'டி-சர்ட்'களை கண்காட்சியில் வைத்து, தங்களது புதுமைகளை காட்சிப்படுத்தினர்.ஒரு வாரமாக, சுய வடிவமைப்பில் ஈடுபட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தகுதி மேலோட்டம், 'அக்ரிலிக்' மற்றும் துணி ஓவியங்கள், கதை கூறும் காட்சி வடிவங்கள், கைவினை, கம்பி வேலை மற்றும் பல்வேறு சமூக கருப்பொருள்களை மையமாகக் கொண்டு, 'டி-சர்ட் வடிமைக்கப்பட்டன.கல்லுாரி டீன் சம்பத், கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆடை வடிவமைப்புத்துறை தலைவர் அருந்ததி கோஷால் ஆகியோரது வழிகாட்டுதலில், மாணவர் குழு, இத்தகைய சாதனையை படைத்திருந்தது.தேசிய பேஷன் தினம், மாணவர்களிடையே புதிய கோணங்கள் மற்றும் சிந்தனைகளை ஊக்குவிக்கும் ஒரு மேடையாக அமைந்தது. இது பேஷனை வணிகம் மட்டுமல்லாமல் ஒரு பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் கருவியாகவும் பார்க்கும் திறமையை வளர்ப்பதாக, மாணவ, மாணவியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி