தேசிய ஒருமைப்பாடு முகாம்கள்; அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு
திருப்பூர்; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், ஒடிசா, தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் தேசிய ஒருமைப்பாடு முகாம் நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்க, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மாநிலம் முழுதும் தேர்வு செய்யப்படுகின்றனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, மாணவர்கள் மூவர் தேர்வாகியுள்ளனர். வரும் 21 - 27ம் தேதி ஒடிசாவில் நடைபெற உள்ள முகாமுக்கு, வணிக வியல் துறை மாணவர், மதுகார்த்திக். கன்னியாகுமரியில் 22 - 28ம் தேதி முகாமுக்கு, விலங்கியல் துறை மாணவர் மாதேஸ்வரன், மதுரையில் 20 - 26ம் தேதி முகாமுக்கு, வணிகவியல் துறை தாமோதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முகாமுக்கு செல்லும் மாணவர்களை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.