தேசிய விண்வெளி நாள்...
ப ள்ளி கல்வித்துறையுடன் இணைந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வானவில் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பை, மூலனுார் ஒன்றியம், மு.கருப்பன் வலசுஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் சுகுல் பெற்றார். அவர் வானவில் மன்றத்தில் அறிவியல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்பதை கவனித்த பள்ளி தலைமையாசிரியர் குப்புசாமி, அறிவியல் ஆசிரியர் மணி ஆகியோர் சிறப்பான முறையில் ஊக்குவிப்பு வழங்கி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். விளைவாக, 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அறிவியலின் அணுகுமுறைகள்' என்ற கருத்துருவின் கீழ், 'வீடுகளில் கால்நடை வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்களும், தீர்வுகளும்' என்ற தலைப்பில் அறிவியல் ரீதியான ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். இது, விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.மாணவன் சுகுல் கூறுகையில், ''அறிவியல் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தது, தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட இடங்களுக்கு என்னை அழைத்துச்சென்று காண்பித்தனர். இதனால், வான் இயற்பியல் மீது ஆர்வம் அதிகரித்தது'' என்றார்.