உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய விளையாட்டு தினம்; மாணவர் சைக்கிள் பேரணி

தேசிய விளையாட்டு தினம்; மாணவர் சைக்கிள் பேரணி

அவிநாசி; அவிநாசியிலுள்ள பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, சிறப்பு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, விளையாட்டு ஆலோசகர் டாக்டர் சக்திவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி, ஒழுக்கம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சைக்கிள் பேரணி, பள்ளி வளாகத்தில் துவங்கி, 3 கி.மீ., துாரம் சென்று மீண்டும் பள்ளிக்கு திரும்பியது. பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் இந்நிகழ்வை வெற்றிகரமாக செய்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் 'பிட் இந்தியா இயக்கம்' விளையாட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை