உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டு மரங்கள் வலுவுறும்.. இயற்கையோ செழிப்புறும்

நாட்டு மரங்கள் வலுவுறும்.. இயற்கையோ செழிப்புறும்

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டம், காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில், 145வது மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று காங்கயம் அடுத்த கீரனுார் ஊராட்சி ரங்கையன் வலசு கிராமத்தில் நடந்தது. காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார், கீரனுார் ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் சிவராம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், காங்கயம் 'துளிகள்', வெள்ளகோவில் 'நிழல்கள்', ஈரோடு 'சிறகுகள்' அமைப்பு நிர்வாகிகள், அருள் நர்சரி நிர்வாகி சுரேஷ், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி நிர்வாகி சேகர் மற்றும் மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ரங்கையன்வலசு கிராமத்தில், வேம்பு, புங்கன், இலுப்பை, நீர்மருது, ஆலமரம், அரசமரம் என, 900 நாட்டு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. காங்கயம் 'துளிகள்' சார்பில், இதுவரை, 28 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுவதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். --கீரனுார் ஊராட்சி, ரங்கையன் வலசு கிராமத்தில், நேற்று 900 நாட்டு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

3 லட்சம் மரக்கன்று நடும் பணி

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை பூர்த்தி செய்ய, தன்னார்வலர்கள் திட்டமிட்டுள்ளனர். மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ