உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மானியத்தில் இயற்கை மருந்துகள்

 மானியத்தில் இயற்கை மருந்துகள்

உடுமலை: உடுமலை வட்டாரம், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான, மெட்டாரைசியம் அனிசோபில், ஒரு கிலோ, ரூ.135 விலையிலும், டிரைகோடெர்மா விரிடி ஒரு கிலோ, ரூ.135 விலையிலும், சூடோமோனஸ் புளோரோசன்ஸ், ஒரு கிலோ, ரூ.180 விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துகளான இவை, மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளவும். மெட்டாரைசியம், மக்காச்சோள படைப்புழுவை நன்கு கட்டுப்படுத்துவதோடு, எருக்குழிகளில் தெளிக்கும்போது கண்டாமிருக வண்டுபுழுக்களை கட்டுப்படுத்தும். காய்கறி பயிர்களில் புழுக்களை நன்கு கட்டுப்படுத்தும். குறிப்பாக கத்திரி காய்ப்புழுவை நன்கு கட்டுப்படுத்துகிறது. டி விரிடி மற்றும் சூடோமோனஸ் இயற்கை மருந்துகள், அனைத்துபயிர்களுக்கும் பயன்படுத்தலாம் ;வேர் அழுகல் மற்றும் வேர்வாடல், இலைக்கருகல் நோய்களை நன்கு கட்டுக்குள் கொண்டு வரும். தற்போது, தென்னையில் பெரும்பிரச்னையாக உள்ள , தென்னை வேர்வாடல் நோய் வராமல் தடுக்க பெரிதும், டி விரிடி மற்றும் சூடோமோனஸ் உதவுகின்றன. மேலும், விபரங்களுக்கு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ், 9751293606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை