மேலும் செய்திகள்
வெட்டி சாய்க்கப்படும் மரங்களை காப்பாற்றுங்க!
21-Mar-2025
உடுமலை, ; ஏழு குளத்தின் கரைகளிலுள்ள பனை மரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட செங்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் உட்பட குளங்களின் கரையில், பனை மரங்கள் அதிகளவு உள்ளன.இயற்கையாக வளர்ந்த இம்மரங்கள், குளத்தின் கரையில், புதர்களை அகற்ற தீ வைத்தல் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு, 50க்கும் மேற்பட்ட மரங்கள் பாதிக்கப்பட்டு கருகி விட்டன. கற்பக தரு எனப்படும் பனை மரங்களை பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், பல ஆண்டுகளான மரங்கள் அழிக்கப்படுவது இயற்கை ஆர்வலர்களை வேதனையடையச்செய்துள்ளது.பல்வேறு பலன்களை வழங்கும் பனை மரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.குறிப்பாக குளத்தின் கரையிலுள்ள பனைமரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
21-Mar-2025