வேதாந்தா அகாடமியில் நவராத்திரி விழா
திருப்பூர்;திருப்பூரில் வேதாந்தா அகாடமியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று நடந்த பூஜையை சிறப்பிக்கும் வகையில், பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், கல்வியா, செல்வமா, வீரமா என்ற நாடகம் மற்றும் கே.ஜி., மழலைகள் தேவர்கள், தேவிகள் போல் வேடமிட்டும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தாளாளர் ஓம் சரவணன், பள்ளி முதல்வர் ஈஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.