தெரு விளக்குகள் பராமரிப்பில் அலட்சியம்; இருளில் ரோடுகள்
உடுமலை; உடுமலையில், பிரதான ரோடுகளில் தெரு விளக்குகள் எரியாததால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.உடுமலை நகராட்சியில், தாராபுரம் ரோடு, பழநி ரோடு, திருப்பூர் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில் ரோட்டோரங்களிலும், மையத்தடுப்புகளிலும் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.தெரு விளக்குகள் பராமரிப்பதில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், பெரும்பாலான தெரு விளக்குகள் எரியாமல் இருட்டாக காணப்படுகிறது. தாராபுரம் ரோட்டில், புற நகர் பகுதி வரை உள்ள அனைத்து விளக்குகளும் எரிவதில்லை.அதே போல், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலும் தெரு விளக்குகள் எரியாததால், சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.