உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; கிராம சபையில் விழிப்புணர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; கிராம சபையில் விழிப்புணர்வு

உடுமலை: சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபடவுள்ளது.சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி, மார்ச் 22ம் தேதி சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சிகளில் நடக்க இருந்தது. இந்நிலையில், தற்போது இந்த கூட்டம் 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் கல்வித்துறை அறிவித்துள்ளது.கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் 29ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நுாறு சதவீதம் எழுத்தறிவு பெறுவது, கற்போருக்கான தேர்வில் அவர்களை பங்கேற்க வைப்பது, வரும் கல்வியாண்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கற்போரை இணைப்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டு, சுற்றறிக்கை வழங்கியுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை