மாநகராட்சிக்கு புதிய துணை கமிஷனர்
திருப்பூர்: தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறையில், பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து, நகராட்சி நிர்வாக துறையின் முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் மாநகராட்சி கமிஷனராகப் பணியாற்றி வரும் மகேஸ்வரி, திருப்பூர் மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதே போல் நெல்லை மாநகராட்சி துணை கமிஷனராக உள்ள ராஜாராம், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.