உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய அரசு பஸ்கள் இயங்கத் துவங்கின

புதிய அரசு பஸ்கள் இயங்கத் துவங்கின

திருப்பூர் : புதிய பஸ்கள் இயக்கம் துவக்க விழா நேற்று முன்தினம் கோவையில் நடந்தது.இதன்படி திருப்பூர் மண்டலத்தில் இருந்து நான்கு புதிய பஸ்கள் நேற்று முதல் இயங்கத் துவங்கின.திருப்பூர் - அறந்தாங்கி (வழி: திருச்சி, புதுக்கோட்டை) - ஒரு பஸ், திருப்பூர் - மதுரை (வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம்) - ஒரு பஸ், கோவை - பழநி (வழி: பொள்ளாச்சி, உடுமலை) - இரண்டு பஸ்கள் நேற்று முதல் இயங்க துவங்கின. திருப்பூர் மண்டலத்துக்குட்பட்ட பழநி கிளையில் இரு பெண் நடத்துனர்கள் பணியில் உள்ளனர். நேற்றுமுன்தினம் கருணை அடிப்படையில் ஐந்து பேருக்கு நடத்துனர் பணியாணை வழங்கப்பட்டது. இதனால், திருப்பூர் மண்டலத்தில் பணிபுரியும் பெண் நடத்துனர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி