உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கனிமவளத்துக்கு வாகன பர்மிட்; இன்று முதல் புதிய நடைமுறை

கனிமவளத்துக்கு வாகன பர்மிட்; இன்று முதல் புதிய நடைமுறை

உடுமலை ; கனிம வளங்கள் எடுத்துச்செல்ல, மின்னணு முறையில் வழங்கப்படும் போக்குவரத்து நடைச்சீட்டுக்கள் (பர்மிட்) மட்டுமே, இன்று முதல் பயன்படுத்த வேண்டும். விதி மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு, போக்குவரத்து நடைச்சீட்டு ஹாலோ கிராம் முத்திரையுடன் வழங்கப்பட்டு வந்த நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் எடுத்துச்செல்ல வழங்கப்படும் போக்குவரத்து நடைச்சீட்டு இன்று (9ம் தேதி) முதல், www.mimas.tn.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாக மின்னணு முறையில் மட்டுமே வழங்கப்படும். மின்னணு முறையில் வழங்கப்படும் பர்மிட் மட்டுமே செல்லுபடியாகும்.மின்னணு முறையில் வழங்கப்பட்ட போக்குவரத்து நடைச்சீட்டு இல்லாமல், எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமவளங்களை எடுத்து வரும் வாகனங்கள், உரிய விதிகளின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும், என, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை