புதிய திட்ட பணிகள்; அமைச்சர்கள் துவக்கினர்
வெள்ளகோவில்: மூலனுார் ஒன்றியம் மற்றும் மூலனுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.3.49 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகள் மற்றும் முடிவடைந்த திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திட்ட பணிகளை துவக்கிவைத்தனர்.