புதிய ரயில்வே அட்டவணை; ஐந்து ரயில்கள் நேரம் மாற்றம்
திருப்பூர்; 2025ம் ஆண்டுக்கான, புதிய ரயில்வே கால அட்ட வணை நேற்று முதல் அமலாகியது. திருப்பூரை கடந்து, கோவை செல்லும் உதய் உட்பட, ஐந்து ரயில்கள் கோவை சென்று சேரும் / கோவையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.ராஜ்கோட் - கோவை (எண்: 16613) இரவு, 8:25 மணிக்கு பதிலாக, 8:55 மணிக்கு கோவை செல்லும். கோவையில் இருந்து ராஜ்கோட்டுக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16614) நள்ளிரவு, 12:15 மணிக்கு பதிலாக, அரைமணி நேரம் தாமதமாக, 12:45 மணிக்கு புறப்படும். சில்சார் - கோவை (எண்: 12516) மதியம், 12:00 மணிக்கு பதிலாக, ஐந்து நிமிடம் முன்பாக, காலை, 11:55 மணிக்கே கோவை வந்து சேரும். பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் (எண்: 22665) கோவைக்கு இதுவரை இரவு, 9:00 மணிக்கு வந்தது. இனி, ஐந்து நிமிடம் தாமதமாக, 9:05 மணிக்கு கோவை வரும்.ஈரோடு - பாலக்காடு டவுன் (எண்: 06819) இனி காலை, 7:15 க்கு பதிலாக, 15 நிமிடம் முன்பாக, காலை, 7:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும். இதனால், ஊத்துக்குளி, திருப்பூர் உட்பட அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு ரயில், 15 நிமிடம் முன்னதாகவே வரும் என தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.