உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2 வாரமாக குடிநீர் இல்லை பொதுமக்கள் முற்றுகை

2 வாரமாக குடிநீர் இல்லை பொதுமக்கள் முற்றுகை

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, கருவம்பாளையம் பூச்சக்காடு, செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. அத்தியாவசிய தேவைக்குக் கூட பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று, அப்பகுதி மக்கள், மாதர் சங்கம் மற்றும் மா.கம்யூ. கட்சியினர் இணைந்து, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சீராக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை