உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விலையில் முன்னேற்றம் இல்லை; வெங்காய விவசாயிகள் விரக்தி

விலையில் முன்னேற்றம் இல்லை; வெங்காய விவசாயிகள் விரக்தி

பொங்கலுார்; கார்த்திகை பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை துவங்கியதும் கிலோ அதிக பட்சமாக, 30 ரூபாய் வரையே விலை போனது.விலை உற்பத்தி செலவுக்கே போதுமானதாக உள்ளது. இதனால், விவசாயிகள் லாபம் பார்க்க முடிய வில்லை. விலை உயரும் என்ற நம்பிக்கையில் சில விவசாயிகள் பட்டறை அமைத்து இருப்பு வைத்தனர். கடுமையான வெயில் காரணமாக இருப்பு வைத்த வெங்காயம் நீண்ட நாட்களுக்கு தாங்காத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அறுவடை தீவிரமடைந்துள்ளது. அறுவடை துவங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் கிலோ, 30 ரூபாயை தாண்டவில்லை.பெரிய வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கிலோ, 20 ரூபாய் ஆக சரிந்துள்ளது. சின்ன வெங்காய வரத்து அதிகரித்துள்ளதாலும், பெரிய வெங்காய விலை சரிந்துள்ளதாலும் சின்ன வெங்காயம் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வேறுவழி இன்றி அறுவடை செய்த வெங்காயத்தை பெரும்பாலான விவசாயிகள் உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனர்.உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் வெங்காயம் விலை உயராதது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை