உள்ளூர் செய்திகள்

நிழற்கூரை இல்லை

உடுமலை; உடுமலை தளி ரோடு வழியாக திருமூர்த்திமலை, அமராவதி அணை, மூணார் போன்றவற்றிற்கு பஸ், சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் யூனியன் ஆபீஸ் ஸ்டாப் முக்கியமானதாக உள்ளது. இங்கு நிழற்கூரை இல்லாததால், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை