உள்ளூர் செய்திகள்

நோ சிக்னல் நடைமுறை

திருப்பூர்; குமார் நகர் சிக்னல் பகுதியில் 'நோ சிக்னல்' நடைமுறை சோதனை அடிப்படையில் நேற்று முதல் துவங்கியுள்ளது. அவிநாசி ரோடு, அங்கேரிபாளையம் ரோடு, குமரானந்தபுரம் 60 அடி ரோடு ஆகியன சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து ரவுண்டானாவும், தானியங்கி டிராபிக் சிக்னலும் அமைந்துள்ளது.இங்கு சிக்னல் இயக்கத்தை நிறுத்தி வைத்து, ரவுண்டானாவில் வாகனங்கள் சுற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டொரு நாள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். ஏதேனும் இடர்ப்பாடு ஏற்பட்டால் அது குறித்து தீர்வு கண்டும், அங்கேரிபாளையம் ரோட்டை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றும் வகையில் போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை