உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

உடுமலை; உடுமலையில், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய கிளை மாநாடு நடந்தது.உடுமலையில், சத்துணவு ஊழியர் சங்கம், உடுமலை ஒன்றிய கிளை மாநாடு, அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. முன்னதாக, தாலுகா அலுவலகத்திலிருந்து, தளி ரோடு வழியாக சங்க அலுவலகம் வரை ஊர்வலம் மற்றும் கொடியேற்று விழா நடந்தது.ஒன்றியத்தலைவர் எலிசபெத் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் பாலசுப்ரமணியம், மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, மாவட்ட தலைவர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், வரும் 25ல், மாவட்ட தலைநகரில் நடக்கும் மறியல் போராட்டத்திலும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி