உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன சுந்தரராஜ், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை, சமூக நீதி கொள்கைக்கு எதிராகவும், பெண்கள் நலனுக்கு எதிராகவும், மூவாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நிரப்பும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதைப்போல், சத்துணவு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம், 6,750 ரூபாய் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண் டும். பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் வாயிலாக அமல்படுத்தவேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல், பெண் சத்துணவு ஊழியர்களுக்கும், 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்கள் திரளானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி