உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேழ முகத்தோனே, ஞான முதல்வனே... விநாயகனே! விநாயகர் சதுர்த்தி; கோலாகலமாக கொண்டாட்டம்

வேழ முகத்தோனே, ஞான முதல்வனே... விநாயகனே! விநாயகர் சதுர்த்தி; கோலாகலமாக கொண்டாட்டம்

உடுமலை; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலையிலுள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று அதிகாலை, யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர் தேன், பஞ்சாமிர்தம், பழச்சாறு, திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம் நடந்தது. சுவாமிக்கு பிடித்த, கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல், அவுள், பொரி, கடலை உள்ளிட்ட பல்வேறு உணவுகள் சுவாமிக்கு படையலிட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. வெள்ளிக்கவச அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, மூஷிக வாகனத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். * உடுமலை தளி ரோடு, குட்டைத்திடலிலுள்ள சித்தி புத்தி விநாயகருக்கு, யாக சாலை பூஜைகள், மகா அபிேஷக பூஜைகள் நடந்தன. மலர் அலங்காரத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளினார். * ருத்ரப்பநகரிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று அதிகாலை முதலே, யாக சாலை பூஜைகள், அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. வெள்ளிக்கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். * காந்திசதுக்கம், வலம்புரி வெள்ளி விநாயகர் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார். * அரசு மருத்துவமனை அருகிலுள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. தங்கக்கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். * கோட்ட மங்கலம் வித்ய விநாயகர் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகளை தொடர்ந்து, சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். அதே போல். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி கிராமங்களிலுள்ள விநாயகர் கோவில்களில், விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று, சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகளுடன், விநாயகப்பெருமானை வழிபட கோவில்களில் திரண்ட பக்தர்களால், விழா களை கட்டியது. 400 சிலைகள் பிரதிஷ்டை உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், இந்து முன்னணி சார்பில், 112 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்து சாம்ராஜ்யம் அமைப்பு சார்பில், 12, சிவசேனா, 7 மற்றும் பொதுமக்கள் சார்பில், 6 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குடிமங்கலம் ஒன்றியத்தில், இந்து முன்னணி சார்பில், 35, இந்து மக்கள் கட்சி, 27, பொதுமக்கள் தரப்பில், 11 சிலைகளும், மடத்துக்குளம் பகுதியில், இந்து முன்னணி சார்பில், 58 விநாயகர் சிலைகளும், இந்து மகா சபா சார்பில், 5 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குமரலிங்கம் பகுதியில், இந்து முன்னணி, 37, சிவசேனா, 15, பொதுமக்கள் சார்பில், 18 சிலைகளும், கணியூர் பகுதியில், இந்து முன்னணி, 16, பொதுமக்கள், 9 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தளி பகுதியில், இந்து முன்னணி, 47, பொதுமக்கள், 8 என, 57 சிலைகளும், அமராவதி பகுதியில், இந்து முன்னணி, 27, பொதுமக்கள், 3 என, 30 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இவ்வாறு, உடுமலை பகுதிகளில், 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் விசர்ஜன ஊர்வலம், இன்று துவங்கி, வரும், 31ம் தேதி வரை நடக்கிறது. உடுமலை பி.ஏ.பி.,கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. பாதுகாப்பு பணியில், ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை