உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிகாரிகள் கல்தா; குப்பை லாரி சிறைபிடிக்க திட்டம்

அதிகாரிகள் கல்தா; குப்பை லாரி சிறைபிடிக்க திட்டம்

திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையத்தில் உள்ள தனியார் பாறைக்குழியில் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல் போராட்டம்செய்தனர். இதனால் கைதான 300 பேரை மாலை விடுவித்த நிலையில், வெளியேற மறுத்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டுக்கட்டாக பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக மண்டபத்துக்கு வெளியே, மற்றொரு தரப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, பேச்சு முடியும் வரை குப்பை கொட்ட கூடாது என மக்கள் தெரிவித்தனர். நேற்று முதலிபாளையம் பிரிவு, சென்னிமலைபாளையத்தில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, பொதுமக்கள் திரண்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூட்டத்தை முடித்து விட்டு வருவர் என்று மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் 'கல்தா' கொடுத்தனர். அதிருப்தியடைந்த மக்கள், 'ஏற்கனவே கூறியபடி பாறைக்குழியில் குப்பை கொட்டினால் போராடவும், குப்பை கொட்டு வரும் வாகனங்களை சிறைப்பிடிப்போம்,' என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை