உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டை ஆக்கிரமித்து ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

ரோட்டை ஆக்கிரமித்து ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

உடுமலை; போக்குவரத்து விதிமீறும் ஆம்னி பஸ்களை, வட்டார போக்குவரத்து துறையினரும், போலீசாரும் கண்டுகொள்ளாததால், பிரதான ரோடுகளில் நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது.உடுமலையில், பிரதான ரோடுகளான, பைபாஸ் ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், பெங்களூரு, சென்னை என பல்வேறு நகரங்களுக்கு, ஏராளமான ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஆம்னி பஸ்கள், பைபாஸ் ரோட்டில், அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் முதல், பஸ்ஸ்டாண்ட் பஸ்கள் வெளியே வரும் பகுதி, ரவுண்டானா மற்றும் ஐஸ்வர்யா நகர், யு.எஸ்.எஸ்., காலனி ரோடு உட்பட குடியிருப்பு பகுதியிலிருந்து வரும் உள்ளிட்ட ஆறு ரோடு சந்திப்பு பகுதிகளிலும், ரோட்டை ஆக்கிரமித்தே நிறுத்தப்படுகின்றன.மாலை, 6:00 மணி முதலே, பிரதான ரோட்டை ஆம்னி பஸ்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பயணிகள் ஏற, சரக்கு ஏற்ற என, சாவகாசமாக ரோடுகளில் நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.விதிமுறையை மீறி ரோடு சந்திப்பு பகுதிகளில் நிறுத்தப்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன.அதோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு என பிரதான ரோடுகளிலும், நிறுத்தி பயணியரை ஏற்றி வருவதோடு, அதிவேகமாகவும் நகரப்பகுதிகளில் இயக்கப்படுகிறது.இதனால், உடுமலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.ஆம்னி பஸ்களை முறைப்படுத்தவும், தாறுமாறாக ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், ஏற்படும் விபத்துக்கள் மற்றும் நெரிசலை தடுக்கவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆம்னி பஸ்கள் பயணியரை நிறுத்தி, ஏற்றுவதற்கு புற நகர் பகுதியை ஒதுக்கவும், நகர பகுதிக்குள் வந்து நெரிசலை ஏற்படுத்தி வருவதை தடுக்கவும், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை