உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / என்.எஸ்.எஸ். அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

என்.எஸ்.எஸ். அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

உடுமலை, ; உடுமலையில் மாவட்ட அளவில் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருப்பூர் மாவட்ட அளவில் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சேசநாராயணன் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி 'சுற்றுச்சூழல் சேவை பணியில் என்.எஸ்.எஸ்.,அலுவலர்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார். முன்னாள் மாவட்ட என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் கந்தசாமி, முருகேசன் நாட்டுநலப்பணி திட்ட பணிகள் குறித்து பேசினர். தொடர்ந்து நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு விடுமுறையில் நடக்க உள்ள சிறப்பு என்.எஸ்.எஸ்., முகாம் குறித்து கலந்துரையாடல் நடந்தது. நடப்பாண்டு முகாமிற்கான தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் அலுவலர் சாந்தி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் முகமது ஹம்சத் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ