மேலும் செய்திகள்
வரும் 9ல் கூட்டுறவுபணியாளர் நாள்
07-May-2025
திருப்பூர் : தமிழகம் முழுவதும் மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் கூட்டுறவு சங்க செயலர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல கூட்டுறவு இணை பதிவாளர்களுக்கு பிறப்பித்த உத்தரவு வருமாறு:கடந்த 2019 மற்றும் 2024 ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் செயலர்கள் மற்றும் உதவி செயலர்கள் பணியிடங்கள் அனைத்தும் பொதுப்பணி நிலைத்திறனின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தாய் சங்கத்திலோ, சொந்த ஊரில் உள்ள சங்கத்திலோ அவர்கள் பணி புரியக்கூடாது. இந்த விதிகளின்படி கடந்த மார்ச் 31 ம் தேதியில், மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக ஒரே சங்கத்தில் பொதுப்பணி நிலைத்திறன் கொண்ட அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். இதன் மீதான நடவடிக்கைகளை நிறைவு செய்து, மே 31ம் தேதிக்குள் உரிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
07-May-2025