திட்டங்களுக்கு மதிப்பீடு தயாரிக்க உத்தரவு
திருப்பூர்: ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். 'வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாக முடிக்கவேண்டும். புதிய திட்டங்களுக்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்யவேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, உதவி இயக்குனர் (பயிற்சி) ஹர்ஷாஉள்பட துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.