உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெருநாய்களை கட்டுப்படுத்த அரசாணை அமலாகுமா?

தெருநாய்களை கட்டுப்படுத்த அரசாணை அமலாகுமா?

இதுவரையில்லாத வகையில், கிராம ஊராட்சிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், தெரு நாய்களை கட்டுப்படுத்துதல் அரசாணை எண். 202, ஊரக வளர்ச்சி (சி4) தேதி: 28.09.1999ன் படி, கிராம ஊராட்சிகளில் நாய் வளர்ப்பவர்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் உரிய அனுமதி பெற்று கொள்ள தெரிவித்தும், நாய் உரிமம் பெறாத நாய்கள், ஊராட்சியின் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தீர்மானம் செயல்பாட்டுக்கு வருமா என்பதுதான் கேள்வி.

கொள்கை வரைவு தயாராகிறது

சமீபத்தில், முத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாநில திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசியதாவது;ஒரு நாள் முதல்வர் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, நாய் விரட்டி செல்வதை 'சிசிடிவி', கேமரா காட்சி 'டிவி'யில் ஒளிபரப்பானது. தெரு நாய் பிரச்னை நிறைய இடங்களில் இருக்கிறது என மக்கள் கூறுகின்றனர். ஒரு கொள்கை வரைவு தயாரிக்கும் யோசனையை வழங்கினேன். திட்டக்குழு உறுப்பினர் அமலோற்பவநாதன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு, பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின், கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி