பயன்பாடின்றி வீணாகும் அவுட் போலீஸ் ஸ்டேஷன்
திருப்பூர்:திருப்பூர் பெரியதோட்டத்தில் உள்ள அவுட் ஸ்டேஷன் பயன்படுத்தப்படாமல், மூடி கிடக்கிறது. திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் வாகன தணிக்கை செய்யவும், மக்கள் எளிதாக போலீசாரை அணுகும் வகையில் பிரதான ரோடு, முக்கிய சந்திப்புகளில் செக்போஸ்ட், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட காங்கயம் ரோடு பெரியதோட்டத்தில் போலீஸ் அவுட் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. திறக்கப்பட்ட போது சில வாரங்கள் முறையாக போலீசார் பணி அமர்த்தப்பட்டு வந்தனர். தற்போது, அவுட் ஸ்டேஷன் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இந்த நிலையில், முறையாக பராமரிக்கப்படாமல், குப்பை தேங்கியும், அங்குள்ள போர்டு கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே, ஸ்டேஷனை முறையாக பராமரித்து, சுழற்சி முறையில் போலீசார் பணி அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.