மேலும் செய்திகள்
பழனிசாமி பிறந்த நாள்: அன்னதானம் வழங்கல்
13-May-2025
அவிநாசி; அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி உட்பட பல பகுதிகளில் அக்கட்சியினர், பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கி, கொண்டாடினர்.அவிநாசி நகர் சார்பில், அரசு மருத்துவமனை முன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆனந்தகுமார், ஜெ., பேரவை நிர்வாகி ராஜசேகர், ஐ.டி., பிரிவு கோகுல் கார்த்திக், பாசறை செயலாளர் பூபதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.அவிநாசி தெற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலாளர் தனபால் தலைமையில், அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில் கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.மேற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமையில், கருவலுார் மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன்பின், கானுார் தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.தொட்டக்களம்புதுாரிலுள்ள ஸ்ரீசங்கர சேவாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில், மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் சுப்பிரமணியம், காத்தவராயன், திரிபுரசுந்தரன், வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் பங்கேற்று, நேற்று முன்தினம் பிறந்த எட்டு குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மோதிரம், ஒரு ஜோடி கொலுசு, புத்தாடை உட்பட தலா 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கினார்.இதில், பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், மாநில ஜெ., பேரவை இணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட பேரவை துணை செயலாளர் நீதிராஜன் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
13-May-2025