பல்லடம் விற்பனைக்கூடம் விவசாயிகளுக்கு அழைப்பு
பல்லடம் ;பல்லடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்தி பயனடையுமாறு, விற்பனை கூட முதுநிலை செயலாளர் சண்முகசுந்தரம் அறிக்கை:பல்லடம், மங்கலம் ரோட்டில், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு, 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு மற்றும் உலர் களன்கள் உள்ளிட்டவை உள்ளன. குறு சிறு மற்றும் பெரு விவசாயிகள், வியாபாரிகள், தொழில் முனைவோர் தங்களது தேவைக்கு ஏற்ப குளிர் பதனக் கிடங்கு மற்றும் சேமிப்புக் கிடங்கு உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.விவரங்களுக்கு, 97861-01242 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.