மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு கூடாது
திருப்பூர்,; கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாதென, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க, வட்டார கிளை மாநாடு, திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கிளை தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் மகேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர்.செயலாளர், ஓராண்டு செயல் அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் செந்தில், வரவு செலவு அறிக்கையை வாசித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிராமப்புற மக்கள் நலன்கருதி, திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுடன், ஊராட்சிகளை இணைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.