உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தைகளுக்கு பெற்றோரே ரோல் மாடல்

குழந்தைகளுக்கு பெற்றோரே ரோல் மாடல்

திருப்பூர்: ''குழந்தைகளுக்கு பெற்றோரே ரோல் மாடலாக உள்ளனர்'' என்று பிரிட்டன் வர்த்தக அலுவலகத்தின் இந்தியாவுக்கான தலைவர் ஜெயச்சந்திரன் கூறினார். முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், அப்பேரல் பேஷன் டிசை னிங் துறை சார்பில், பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரிட்டன் வர்த்தக அலுவலகத்தின் இந்தியாவுக்கான தலைவர் ஜெயச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''மாணவர்கள் முன்னேற்றத்துக்கு, நற்குணம், ஒழுக்கம் மிக முக்கியம்.குழந்தைகள் வாழ்வில், பொறுமை, தொடர் முயற்சி, ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானது. பெற்றோரை 'ரோல் மாடலாக' கொண்டே பிள்ளைகள் வளர்கிறார்கள்,'' என்றார். அகாடமி தலைவர் மோகன்குமார், மாணவர் சேர்க்கை தலைவர் ஸ்ரீதர், கல்லுாரி டீன் சம்பத், கல்லுாரியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். பிக்காசோபிறந்த நாள் விழா அமைதி சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் ஓவியர் பிக்காசோ. அவரது, 144வது பிறந்த நாள் விழா, 'நிப்ட் - டீ' கல்லுாரியில் கொண்டாடப்பட்டது. பெண்கள் தலைவர் என்ற கருத்துடன் கூடிய அவரது ஓவியத்தை இருமடங்கு பெரிதாக வரைந்து, மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தியிருந்தனர். மாணவர்களின் கலை உணர்வை ஊக்குவிக்கும் வகையில், இவ்விழா கொண்டாடப்படுவதாக, கல்லுாரி நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி