உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பார்க் ரோடு சீரமைப்பு பணி 

பார்க் ரோடு சீரமைப்பு பணி 

திருப்பூர்; திருப்பூர் நொய்யல் கரையை ஒட்டி எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழியாக பார்க் ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டில் சுரங்க பாலம் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், இந்த ரோடு கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஜல்லிக்கற்களும் புழுதி மண்ணும் பரவியதால் அவதி அதிகரித்தது. இதனால், இந்த ரோட்டை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ரோடு முழுமையாக புதுப்பிக்கப்பட்ட நிலையில், வாகனப் போக்குவரத்து தற்போது சீரடைந்துள்ளது. ஆனால், பண்டிகை காலத்தில் இப்பணிகளை மேற்கொள்வதால், வாகன ஓட்டிகள் நேற்று பெரிதும் அவதிப்பட்டனர். இருப்பினும், சீரமைப்பு பணியால், வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !