உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமும் 3,000 பேர் பயணம் பாசஞ்சர் ரயில் அவசியம்

தினமும் 3,000 பேர் பயணம் பாசஞ்சர் ரயில் அவசியம்

திருப்பூர்: 'கோவை - திருப்பூர் இடையே புதிய பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும்,' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.ஈரோடு - கோவை, ஈரோடு - பாலக்காடு டவுன் (கோவை வழியாக) இடையே பாசஞ்சர் ரயில் தினமும் காலை, மாலை இயக்கப்படுகிறது. இவ்விரு ரயில்கள் ஊத்துக்குளி, திருப்பூர், வஞ்சிபாளையம் ஸ்டேஷன்களில் நின்று பயணிக்கிறது. கல்லுாரி மாணவ, மாணவியர், பணியாளர்கள், அரசு அலுவலர், ஊழியர் என, 1,500க்கும் மேற்பட்டோர் பாசஞ்சர் ரயிலில் பயணிக்கின்றனர்.'மெமு' ரயில் என்பதால், ஒரு மகளிர் பெட்டி உட்பட, எட்டு பெட்டிகள் மட்டுமே உள்ளன. இது, பயணிகள் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால், பெரும்பாலானோர் நின்றபடியே பயணிக்கின்றனர். ஏற்கனவே கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நிலையில், இந்த ரயிலில் தொடர்ந்து சீசன் டிக்கெட் பெறுவோர் எண்ணிக்கை, தினசரி பயணிப்போரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.ரயில் பிளாட்பார்ம் வந்தவுடன் ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டு, முண்டியடித்து ஏறுகின்றனர். எனவே, திருப்பூரில் இருந்து கோவை, கோவை - திருப்பூர் இடையே பாசஞ்சர் (மெமு) ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.ரயில் பயணிகள் கூறுகையில், 'கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், பாலக்காடு, திருச்சூர், கோட்டயம், பொள்ளாச்சி, மங்களூரு வரை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து ஈரோடு, சேலம் வழியாக ரயிலில் பயணிப்போர் அதிகம்.குறிப்பாக, கோவை - திருப்பூர் இடையே தொழில் நிமித்தமாக, கல்வி நிறுவனங்களுக்கு, 3,000 பேர் தினசரி பயணிக்கின்றனர். 'மெமு' ரயில்களை கோவை - திருப்பூர் இடையே இயக்கினால், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை