உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கம்பத்தில் மோதிய பஸ் உயிர் தப்பிய பயணிகள்

மின் கம்பத்தில் மோதிய பஸ் உயிர் தப்பிய பயணிகள்

பொங்கலுார்; நேற்று முன்தினம் கும்ப கோணத்தில் இருந்து தனியார் பஸ் பொங்கலுார் வழியாக கோவை நோக்கி சென்றது. அதில், 36 பயணிகள் இருந்தனர். ராபர்ட் என்பவர் பஸ்ஸை ஓட்டினார். பொங்கலுார் அருகே மின் கம்பத்தில் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதம் அடைந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஓட்டுநருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள், 36 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ