மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
அவிநாசி: கடந்த, 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 70 வயது நிறைவு செய்தவர்களுக்கு பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட கிளை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், வடக்கு ரத வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கிளைச் செயலாளர்கள் நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர். இணைச்செயலாளர் ரங்கசாமி வரவேற்புரை ஆற்றினார். சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் முத்துசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராமன், துணைத் தலைவர்கள் துரைராஜ், சண்முகம் மற்றும் கிளை பொருளாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
8 hour(s) ago