உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமங்களில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

கிராமங்களில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

உடுமலை : பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கிராமங்களில் கொசுப்புழு ஒழிப்புக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. இதனால், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.காலையில் அதிக வெப்பமாகவும், மாலையில் மழைபொழிவாகவும் சீதோஷ்ன நிலை மாற்றமடைந்துள்ளது. இதனால் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்றுகள் மட்டுமில்லாமல், டெங்கு பரவலுக்கான நிலையாகவும் மாறியுள்ளது.டெங்கு தடுப்புக்கு, கிராமங்களில் கொசுப்புழு உற்பத்தியை கட்டுபடுத்துவதற்கான மருந்துகள், வீடுகளில் வழக்கமாக தெளிக்கப்படுகின்றன. ஆனால் கொசுத்தொல்லை கிராமங்களில் குறைந்தபாடில்லை.தற்போது மழை துவங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கையாக உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், புகை மருந்து அடிப்பதற்கு பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.கிராம மக்கள் கூறுகையில், 'கிராமங்களில் கொசுத்தொல்லை தீர்ந்தபாடில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதைக்கட்டுபடுத்த ஊராட்சி நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் வாரம் தோறும் சுழற்சி முறையில் புகை மருந்து அடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை