உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம சபை கூட்டத்தில் மக்களுக்கு அனுமதி மறுப்பு; பி.டி.ஓ.,விடம் புகார்

கிராம சபை கூட்டத்தில் மக்களுக்கு அனுமதி மறுப்பு; பி.டி.ஓ.,விடம் புகார்

உடுமலை; கிராமசபை கூட்டங்களில், பேசக்கூடாது என தெரிவித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில், கடந்த 29ம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில், பொதுமக்கள் சார்பில், குடிநீர் வினியோக குறைபாடு, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் பேசினர்.அக்கூட்டத்தில் பங்கேற்ற தனி அலுவலர், கிராமசபை கூட்டத்தில் பேச, பி.டி.ஓ.,விடம் முன் அனுமதி பெற வேண்டும், என தெரிவித்து, பேச அனுமதிக்கவில்லை. இதற்கு பொதுமக்கள் கூட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற தனி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில், மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகர கமிட்டி உறுப்பினர் ராஜா, கிளை செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், வைரவன், லோகநாதன், மணிகண்டன் உள்ளிட்டோர், உடுமலை பி.டி.ஓ.,சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை