உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழசுக்குப் பதிலாக புதுசு பஸ்சை மாற்றிய மக்கள்

பழசுக்குப் பதிலாக புதுசு பஸ்சை மாற்றிய மக்கள்

பல்லடம்; பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பனியன் தொழிலாளர், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர், அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.திருப்பூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ், 2பி, சின்னக்கரை, கரைப்புதுார், அறிவொளி நகர், சேடபாளையம் வழியாக பல்லடம் வரை இயங்குகிறது.சமீபத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், '2பி' பஸ்சும் மாற்றப்பட்டது. இதற்கிடையே, புதிய பஸ் வேறு வழித்தடத்துக்கு மாற்றப்பட்டதால், பழைய பஸ்தான் மீண்டும் இயங்கும் என்ற தகவல் கிடைத்தது. பொதுமக்கள், பழைய பஸ் இயக்கப்பட்டால், அதை சிறைபிடிப்போம் என அறிவித்தனர். பஸ்சை சிறை பிடிக்கவும் தயாராகினர். போக்குவரத்து கழக அதிகாரிகள், இப்பகுதி பொதுமக்களை தொடர்பு கொண்டு பேச்சு நடத்தினர். இதன்படி நேற்று காலை புதிய பஸ் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ