உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வீட்டு மனை பட்டா வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

 வீட்டு மனை பட்டா வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

உடுமலை: மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், என கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். உடுமலை கோட்டாட்சியர் குமாரிடம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, வீடுகள் கட்டித்தரவும், மின்னணு தேசிய அடையாள அட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் உடல் நல பரிசோதனைகள் மேற்கொள்ள, திருப்பூர் அரசு மருத்துவமனை செல்ல வேண்டியுள்ளதால், கடுமையாக பாதித்து வருகின்றனர். உடுமலை அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ