உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் 

பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் 

உடுமலை; மடத்துக்குளம், கொழுமம் குப்பம்பாளையத்திலுள்ள பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் வரும், 4ம் தேதி நடக்கிறது. மடத்துக்குளம், கொழுமம் குப்பம்பாளையத்தில் நுாற்றாண்டு பழமையான, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பள்ளி கொண்ட பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், செல்வகணபதி, சூளைக்கருப்பண்ணசவாமி, பையம்மன், கன்னிமார், வீரமாத்தி அம்மன், முத்தம்மாள், நாக கன்னி, கருடாழ்வார் ஆகிய பரிவார தெய்வங்களும் எழுந்தருளி உள்ளனர். இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, வரும் செப்., 4ம் தேதி, காலை, 7:40 முதல், 8:40க்குள், மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. இதற்காக, யாக சாலை பூஜைகள், 3ம் தேதி, காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து, இரண்டு கால பூஜைகள் செய்யப்பட்டு, 4ம் தேதி, மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, தெலுங்கு மன்னவார் குலத்தினர் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி