மேலும் செய்திகள்
நிழற்கூரை இன்றி மக்கள் தவிப்பு
31-Oct-2024
நிழற்குடை வசதி தேவை
12-Nov-2024
உடுமலை; உடுமலை எஸ்.வி., புரத்தில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்க வேண்டும், என, மனு அளிக்கப்பட்டது.உடுமலை கொழுமம் ரோட்டில், எஸ்.வி., புரத்தில், பல ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள், பஸ்சிற்காக ரோட்டிலேயே காத்திருக்கும் நிலை உள்ளது.மேலும், பழநி ரோடு பகுதியில், உள்ள பள்ளிகள், கல்லுாரிகளுக்கு வரும் மாணவ, மாணவியரும், கொழுமம் ரோடு, எஸ்.வி.,புரத்திலிருந்து, பஸ்களில், ஏறி, இறங்கி வருகின்றனர்.இவ்வாறு, எஸ்.வி.,புரம் பஸ் ஸ்டாப்பில், பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் காத்திருக்கும் நிலையில், அங்கு நிழற்கூரை இல்லாததால், வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.எனவே, எஸ்.வி.,புரத்தில் பயணியர் நிழற்கூரை அமைக்க வேண்டும், என, இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, கணக்கம்பாளையம் பகுதியில் அரசு விழாவிற்கு வந்த, அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
31-Oct-2024
12-Nov-2024