மேலும் செய்திகள்
மக்களுக்கு தோளோடு தோளாக துணை நிற்பது 'தினமலர்'
14-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குடிநீர் குழாய்கள் அவிநாசி ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குமார் நகர் பகுதியில், தீயணைப்பு நிலையம் எதிரே, போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ள இடத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து ெவளியேறிய குடிநீர் ரோட்டில் வீணாகச் சென்று பாய்ந்தது. மேலும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் ஆகியோர் தினமும் கடந்து செல்லும் வழியாகவும் இந்த இடம் உள்ளது. குழாய் உடைப்பு காரணமாக ரோட்டில் குடிநீர் வீணாவது குறித்து 'தினமலர்' நாளிதழில் சுட்டிக் காட்டி செய்தி வெளியானது.இதனால், நேற்று குழாய் உடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
14-Oct-2025