குழாய் மாற்றும் பணி; குடிநீர் சப்ளை நிறுத்தம்
திருப்பூர்; புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில், 3வது திட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டக் குழாய் அமைந்துள்ள காலேஜ் ரோட்டில் பிரதான குழாய் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. காலேஜ் ரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியில், ரயில்வே பாதையைக் கடந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. பாலம் அமையும் இடத்தில், 3வது குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால், 28, 29 ஆகிய தேதிகளில், 3வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் தடைபடும் என, மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.