ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
உடுமலை; குமரலிங்கம் ரோட்டில், நெடுஞ்சாலைத்துறையால், மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாப்புக்காக, தடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில், மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. தற்போது, காரத்தொழுவு - குமரலிங்கம் ரோட்டில், 4 வது கி.மீ., ல், நாவல் மற்றும் வேப்பமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. கால்நடைகளால், மரக்கன்றுகள் பாதிப்பதை தவிர்க்க, தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகிறது. பிற மாவட்ட முக்கிய சாலைகளிலும் மரக்கன்றுகள் விரைவில் நடவு செய்யப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.