உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பஸ்களை பாதுகாப்பாக இயக்க உறுதிமொழி

 பஸ்களை பாதுகாப்பாக இயக்க உறுதிமொழி

திருப்பூர்: 'பஸ் ஓட்டும் போது, மொபைல் போன் பேச மாட்டேன். நடத்துனரிடம் போனை ஒப்படைத்து விடுவேன்,' என, அரசு பஸ் டிரைவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அரசு போக்குவரத்து கழகத்தை நம்பி வரும் பயணிகளை பாதுகாப்பாக அவர்கள் இறங்குமிடத்துக்கு கொண்டு சென்று விடும் பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே, டிரைவர், நடத்துனர் பணியின் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள, போக்குவரத்து கழக அதிகாரிகள், நேற்று, திருப்பூர் கிளை - 1 மற்றும் 2, பழநி, காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட டிப்போக்களில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தினர். திருப்பூர் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோதிமணிகண்டன் தலைமை வகித்தார். 'பஸ் ஓட்டும் போது, மொபைல் போன் எடுக்க மாட்டேன்; நடத்துனரிடம் மொபைல் போனை ஒப்படைத்து விடுவேன். ஹெட் போன், ப்ளூடூத் முதலியவற்றை பணியின் போது பயன்படுத்த மாட்டேன். பணியை சீராக மேற்கொண்டு, தவறுகளுக்கு இடமின்றி, பஸ்சை பாதுகாப்பாக இயக்குவேன்,' என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ