உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று வேலை நிறுத்தம்; பி.எம்.எஸ்., பங்கேற்காது

இன்று வேலை நிறுத்தம்; பி.எம்.எஸ்., பங்கேற்காது

திருப்பூர்; தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பி.எம்.எஸ்., தொழிற்சங்கம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட பி.எம்.எஸ். தொழிற்சங்க செயல் தலைவர் செந்தில் கூறியதாவது:இன்று (9ம் தேதி) நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டமானது முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் முழுமையான தொழிலாளர் நலனோ, பொதுமக்கள் நலனோ எள்ளளவும் இல்லை. மேலும் இப்போராட்டத்துக்கான கோரிக்கைகளாக முன் வைக்கப்பட்டுள்ளவற்றில், எட்டு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.எனவே, நாளை (இன்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பி.எம்.எஸ்., தொழிற்சங்கம் பங்கேற்காது, என தேசிய தலைமை அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பி.எம்.எஸ்., அமைப்பினர் வழக்கம் போல் பணியாற்றுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை